
ஹர்திக் பாண்டியா, மனைவி நடாஷாவை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். ஹர்திக், நடாஷா என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டர். இந்நிலையில் தனது விவாகரத்து முடிவு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தங்களது தனி உரிமையை மதித்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டுக்காரரான நடாஷா அடிக்கடி தனது நாட்டுக்கு சென்று விடுவார் என்றும், ஆனால், அவர் தன்னுடனேயே இருக்க பாண்டியா விரும்புவதாகவும், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இருவரும் பிரிய காரணமென்றும் கூறப்படுகிறது. நடாஷாவுக்கு ₹100 கோடி ஜீவனாம்சம் கொடுக்க ஹர்திக் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.