அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரு நிலையான தொகையை மாதாந்திர காலாண்டு (அ) ஆண்டு அடிப்படையில் இத்திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். இப்பணத்தை டெபாசிட் செய்வதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால்(PFRDA) பங்களிப்புகள் செய்யப்படுகிறது. அதோடு ஓய்வுபெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு இப்பணம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

அதேபோன்று இந்த திட்டமானது 18 -40 வயது வரையுள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி 01 அக்டோபர் 2022 முதல் வரிசெலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரத் தகுதியற்றவர் ஆவார். இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 -5000 வரை கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர் இறந்துவிட்டால் இந்த ஓய்வூதியத்தொகை நாமினியால் பெறப்படும்.