
கிருஷ்ணகிரி மாவட்டம் டி.பாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பங்கியம்மாள்(23). நிறைமாத கர்ப்பிணியான இளம்பண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து இளம்பெண்ணை உனிசட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆனால் தொழுவமலை வனப்பகுதியில் சென்றபோதே இளம் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஓட்டுனர் சிவகுமார் ஆம்புலன்ஸை சாலை ஓரமாக நிறுத்திய பிறகு மருத்துவ உதவியாளர் திருவேணி பிரசவம் பார்த்ததில் சம்பங்கியம்மாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகு தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.