விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.38,000 கோடியும், யூரியாவுக்கு ரூ.70,000 கோடியும் வழங்கப்படும்.

மேலும் உரங்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன் ரூ.76, பாஸ்பரஸ் ரூ.41, பொட்டாஷ் ரூ.15 மற்றும் கந்தகத்திற்கு ரூ.2.8 மானியமாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், விவசாயிகளுக்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது