சென்னையில் உள்ள பிரதான சாலைகளான கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு போன்றவற்றை பொலிவுபடுத்தும் விதமாக விரைவு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் இன்ஜினியரிங் லிமிடெட் போன்றவற்றிடமிருந்து மாதிரி வடிவமைப்பு திட்டங்கள் பெறப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இதனை கொண்டு கிண்டி மற்றும் குரோம்பேட்டையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

சென்னை மாநகரக்குள் மட்டும் 45 கிலோமீட்டர் தூர சாலையில் மல்டி மாடல் இண்டெகரேஷன் கட்டமைப்பாக மாற்றி இருக்கின்றனர். அதாவது நடைபாதை, சைக்கிள் ட்ராக், பசுமையான கட்டமைப்பு கொண்ட மீடியன், சாலை பாதுகாப்பு போதிய இடங்கள் இருக்கும் பகுதிகளில் பார்க்கிங் வசதி, ஆறு வழி சாலை, குறிப்பிடப்பட்ட இடங்களில் நடை மேம்பாலம், மாநகர பேருந்துகள் – மெட்ரோ ரயில் -புறநகர் ரயில் போன்றவற்றில் ஒன்றுக்கென்று ஈஸியாக மாறும் விதமான வசதி போன்றவை கொண்டுவரப்பட உள்ளது.

சென்னையில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஒட்டுமொத்தமாக 270 கிலோ மீட்டர் தூர சாலையை நிர்வகித்து வருகிறது. இதில் 134 கிலோ மீட்டர் தூரத்திற்கு மல்டி மாடல் இண்டக்ரேஷன் திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முத்துசாமி பாலத்தில் இருந்து தாம்பரம் வரை ஆறு வழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் வர உள்ளது. இது அண்ணா சாலையின் குறுக்கே ஓமந்தூரார் எஸ்டேட்டிற்கு செல்லும் விதமாக இருக்கும். மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலமாக சாலையோர வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள், சிறிய கடைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் சாலை பகுதியை எளிதில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு உலக வங்கியின் உதவியுடன் 1500 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு CUMTA,CMDA,CMRL,GCC,MTC, மாநகர காவல் துறை,Tangendco, தெற்கு ரயில்வே, மெட்ரோ குடிநீர் வாரியம் பி.எஸ்.என்.எல் போன்றவற்றுடன் ஆலோசனை மேற்கொண்டு இதற்கான இறுதி வடிவம் கொண்டுவர இருக்கின்றனர். மேலும் வருகிற மார்ச் மாதம் இதற்கான வரைவு அறிக்கை நிறைவு பெற்றுவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.