இந்திய ரயில்வேயானது பிரிமியம் ரயில்களில் நல்ல தரமான உணவை வழங்குகிறது. எனினும் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பயணிகள் திருப்தியடையவில்லை. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் Pantry Car-ல் குறைவான எண்ணிக்கையில்தான் உணவுகள் கிடைக்கும். கொரோனா காலக்கட்டத்தில் இவை தற்காகலிமாக கொடுகப்படவில்லை. தற்போது மீண்டும் அவற்றை ரயில்வே பயணிகளுக்கு வழங்க IRCTC முடிவு செய்துள்ளது. அதன்படி பயணிகள் சமோசா, ரொட்டி பக்கோரா, வெங்காய பஜ்ஜி, வடை, உப்மா, மசாலா தோசை உள்பட சுமார் 70 உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயில் Pantry Car-ல் இவை தயாரிக்கப்படும்.

விலை பட்டியல்

சப்பாத்தி ரூபாய்.10, கச்சோரி ரூ.10, பிளேட் இட்லி ரூ.20, சட்னி-சாம்பார் இட்லி ரூ.20, பிரெட் வெண்ணெய், பட்டர் டோஸ்ட் (2 துண்டுகள்) ரூ.20, ஆலு போண்டா, கொழுக்கட்டா (2 பீஸ்)-ரூ.20, சமோசா (2) பிஸ்-ரூ 20, மெதுவடை (2 துண்டுகள்) ரூ 20, சூடான, குளிர்ந்த பால்-ரூ 20, மசாலா,தால் வடை (2 துண்டுகள்) ரூ.30, ரவா/கோதுமை/ஓட்ஸ்/சேமியா உப்மா ரூ.30, உத்தபம் ரூ.30, தஹி வடை (2 துண்டுகள்) ரூ.30, ரொட்டி பக்கோரா ரூ.30, வெங்காயம்/உருளைக் கிழங்கு/பிரிஞ்சி /பாஜி ரூ.30, தோக்லா ரூ.30, போஹா ரூ.30, தக்காளி/வெஜ்/சிக்கன் சூப் ரூ.30, கட்டா சப்ஜி ரூ.30, மசாலா தோசை ரூ.30, ராஜ்மா சோல் அரிசி ரூ.50, இதேபோல், தாஹி-அரிசி ரூ.50, பனீர் பகோரா (2 துண்டுகள்) ரூ.50, வெஜ் பர்கர் ரூ.50, ராஜ்மா/சோல் அரிசி ரூ.50, சீஸ் சாண்ட்விச் (2 துண்டுகள்) ரூ.50, வெஜ்நூடுல்ஸ் ரூ.50, பாவ் பாஜி (2 பாவ்) ரூ. 50க்கு கிடைக்கும்.