நாடு முழுவதும் உள்ள முதல் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தேசிய பொது இயக்க அட்டையின் மூலமாக இயங்கும் சிங்கார சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஒரு அட்டையை வைத்து பயணம் செய்யலாம்.

இது முதலில் கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம் மற்றும் கிண்டி ஆகிய ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த அட்டையை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையின் மூலமாக பொதுமக்கள் 2000 ரூபாய் வரை பணத்தை சேமிக்க முடியும். மெட்ரோ ரயில் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண அமைப்புகளில் மற்றும் நுழைவு கட்டண மையங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இனிவரும் நாட்களிலும் இதே அட்டையின் மூலம் நாட்டின் பல்வேறு கட்டண அமைப்புகளிலும் பணத்தை செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.