தமிழக அரசானது அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட காலம் அதாவது 12 மாதம் முழு ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியில் மகளிர் ஊர்க்காவல் படையினருக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது .

இது குறி த்து அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு சட்ட மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரி ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து மகளிர் ஊர்காவல் படையினருக்கும் ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.