மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இதனை காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த கார் நிற்காமல் அவர் மீது மோதும் விதமாக சென்றுள்ளது. இதனால் காவலர் அந்த காரின் முன் பக்கம் தொற்றியபடி காணப்பட்டார்.

ஆனால் கார் நிற்காமல் அவரை ஒரு கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் கார் ஓட்டிய நபர் 19 வயது உடையவர் எனவும் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாமல் அவர் ஓட்டிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணிக்பூர் நகர போலீசாரால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி அந்த நபரின் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.