நடிகரும், பிரபல இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில், தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் அபாய கட்டத்திலிருந்து மீட்டுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் அவருக்கு சில காயங்கள் உள்ளதாம். இதற்காக உயர் சிகிச்சை எடுக்க ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது.