சமீப காலமாகவே உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. ஒரு சில இடங்களில் வெயிலால் மரணமும் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவையும் இந்த வெயில் விட்டு வைக்கவில்லை.

அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதன் காரணமாக ஆபரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருக தொடங்கி இருக்கிறது. வாஷிங்டனில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கனின் சிலை உருகி தலைதொங்கியதால் தலையை மட்டும் கழற்றிவிட்டு உடல் சிலையை மட்டும் வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.