அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் அட்டேட்டுக்காக ரசிகர்கள் பெரும் காத்திருப்பில் இருந்து வருகின்றனர். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படத்திற்கான ஸ்கிரிப்டை வலுவாக மேம்படுத்தி, களமிறங்குவதற்கு மகிழ்திருமேனி நேரம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் தற்போது உலக பைக் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.