திரை உலகில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 45 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா த்ரிஷா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட  பலரும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சி எடுக்கும் பொழுது கையில் காயம் ஏற்பட்டதாக நடிகை சுவாசிகா போட்டோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். கையில் சிராய்ப்பு காணப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கோவை பொள்ளாச்சி சென்னை பகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.