தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் திடீரென கடல் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.

அப்போது ஆபத்தை உணராமல் சிலர் பாறைகளின் மேல் ஏறி நின்று செல்பி எடுக்கின்றனர். இதற்கிடையே கடல் உள்வாங்கியதால் சிலைகள் வெளியே தெரிகிறது. கந்த சஷ்டி விழாவிற்கு முன்னர் அந்த சிலைகளை அப்புறப்படுத்த கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.