குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 252 பேர் பயணம் செய்துள்ளனர். அனைவருமே இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமான விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ்(40) என்பவர் உயிர் தப்பினார். ரத்த காயங்களுடன் விஷ்வாஸ் பதற்றமாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரதிக் ஜோஷி (45), அவரது மனைவி கோமி வியாஸ்(40), அவர்களின் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியது.