‘அமரன்’ திரைப்படத்திற்காகச் சிறந்த பின்னணி இசைக்கான 72-வது தேசிய விருதினை வென்றுள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
தனது திரைப் பயணத்தில் மூன்றாவது முறையாகத் தேசிய விருதைப் பெறுவதைத் பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு இப்படியொரு வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
View this post on Instagram
இந்த அங்கீகாரம் தனக்குப் பெரும் உத்வேகத்தைத் தருவதாகக் கூறியுள்ள ஜி.வி. பிரகாஷ், தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, தொழில்நுட்பக் குழுவினர், தனது குடும்பத்தினர் மற்றும் எப்போதும் தனக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிப்பதாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
