தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த முன்னணி நடிகையாக இருந்த இவர் துபாயில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது ஒரு தற்செயலான மரணம் என்று கூறியுள்ளார். அழகாக இருப்பதற்காக அவர் கடுமையான டயட்டில் இருந்ததாகவும், அடிக்கடி பட்டினியாக இருந்ததாகவும், உணவில் எப்போதும் உப்பு சேர்த்துக் கொள்ளவே மாட்டார் என்றும் கூறியுள்ளார். அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ள இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.