கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வேங்கை வயல் நீர்த்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விவகாரம் குறித்து இதுவரை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது, தமிழ்நாட்டுல வேங்கை வயல் அப்படிங்குற ஊர்ல என்ன நடந்துச்சுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்கு தெரியல. இவ்வளவு காலங்கள் தாண்டி, இதனை வருஷங்கள் தாண்டி ஒரு துரும்ப கூட கிள்ளி போடலையே? . இதெல்லாம் அம்பேத்கர் அவர்கள் இன்னைக்கு பார்த்தார் என்றால் வெட்கப்பட்டு தலை குனிஞ்சு போவார் என கூறியுள்ளார்.