இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க முடியும். இது குடிமகனாக வாக்களிக்கும் உரிமையை மட்டும் அல்லாமல், அடையாள சான்றாகவும் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிகளும் உள்ளன. வீட்டிலிருந்து, சில நிமிடங்களில் ஆன்லைன் மூலமாகவே இப்பணியை செய்யலாம்.

வாக்காளர் சேவை இணையதளம் (NVSP) மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். www.nvsp.in தளத்தில் ‘New Voter Registration’ என்பதைத் தேர்ந்தெடுத்து, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களுடன் ‘படிவம் 6’ ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். நீங்கள் சமர்ப்பித்த பின் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் ‘டிராக் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்’ பகுதியில் பார்வையிடலாம்.

ஆஃப்லைனில் பதிவு செய்ய, அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் ‘படிவம் 6’ ஐப் பெற்று பூர்த்தி செய்யவும். தேவையான ஆதார ஆவணங்களுடன் அதை சமர்ப்பிக்கலாம். அதிகாரிகள் விண்ணப்பத்தை சரிபார்த்து, பெயர் சேர்க்கப்படும். விண்ணப்ப நிலையை NVSP தளத்தில் அல்லது அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் சென்று சரிபார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.