தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை சமந்தா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா நாக சைதன்யா விவகாரம் குறித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் சமந்தா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதாவது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு கே.டி ராமராவ் தான் காரணம் என்று அவர் கூறினார். இதற்கு நாகர்ஜுனா எதிர்த்தரப்பினரை விமர்சிக்க நடிகர் நடிகைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும், முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் என்னுடைய குடும்பம் பற்றி பேசிய கருத்துகள் முற்றிலும் தவறானது என்றும், நீங்கள் சொன்ன கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் அமைச்சர் கொன்டா சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு அமைச்சராக உங்களுடைய வார்த்தைகள் கண்ணியமானதாக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய விவாகரத்து என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் எனவும் இதில் எந்த ஒரு அரசியல் சதியும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் உங்களுடைய சண்டையில் என்னுடைய பெயரை தேவையில்லாமல் இழுக்காதீர்கள் எனவும் சமந்தா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.