கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், விஜய் வரும் ஜூலை மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் வியூக  பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்துள்ளதாகவும் தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்றும் கூறப்படுகிறது.