பட்டாசு தயாரிக்கும் தொழில் அதிகம் நடக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துக்கள் நடந்துள்ளது. இந்த பட்டாசு விபத்துகளில் 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது மற்றும் ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்துக்கள் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.