தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை விகடன் நடத்துகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த நிலையில் முதலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் விசிக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டுள்ளார். இவர் தற்போது விழாவில் பேசும்போது திமுகவை நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார். விஜய் வேங்கை வயலுக்கு செல்ல வேண்டும். நீங்கள் களத்திற்கு வாங்க. பாஜகவை தமிழ்நாட்டில் ஒழித்து விட்டோம். 2026-ல் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை 2026-ல் உருவாக்குவோம். மன்னராட்சியை ஒழிப்போம் என கூறியுள்ளார். பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆக ஆகக்கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் என்று கூறினார்.