இன்று தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை காண ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்தனர். ரஜினிகாந்த் அவர்களும் வீட்டிற்கு வெளியில் வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக தீபாவளியை கொண்டாட வேண்டும். அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் என்று வாழ்த்து கூறியதோடு, விஜய் மாநாட்டில் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.