தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருமாவளவன் திமுக கூட்டணியின் அழுத்தத்தால் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். ஆனால் இதனை திருமாவளவன் மறுத்த நிலையில் அழுத்தம் கொடுத்து கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய அளவிற்கு நாங்கள் பலவீனமானவர்கள் கிடையாது என்றார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நடிகர் விஜய் சொன்னது சரிதான் என்று தற்போது பேட்டியில் கூறியுள்ளார். அதாவது விஜய் சொன்னது 100% சரிதான். திமுக கூட்டணிகளின் அழுத்தத்தால் தான் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். மேலும் 200 தொகுதிகளில் அடுத்து வரும் தேர்தலில் வெல்வோம் என்று முதல்வர் ஸ்டாலினும் திமுக கட்சியின் அமைச்சர்களும் கூறியது இந்த வருடத்தின் மிகப்பெரிய ஜோக் என்றும் கூறினார்.