தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நிலையில், சமீபத்தில் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். விஜயின் முதல் மாநாடு முடிந்த நிலையில் அவர் மீது பலரும் விமர்சனங்களை வைக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் போஸ் வெங்கட் விஜயை கடுமையான சொற்களால் விமர்சித்தார். அதாவது யப்பா உன்கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த விமர்சனத்திற்கு தற்போது இயக்குனரும் நடிகருமான அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது நீங்கள் விமர்சிக்கும் அளவுக்கு விஜய் ஒன்னும் தரம் தாழ்ந்தவர் கிடையாது. விஜயை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு பைசா கூட கொடுக்காமல் அவர் இலட்சக்கணக்கானோரை கூட்டியுள்ளார். இது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது என்று கூறினார். மேலும் முன்னதாக இயக்குனர் அமீர் விஜய் அழைத்தால் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு தான் தயாராக இருக்கிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்