தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற 17- ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் வாத்தி திரைப்படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தையும் தயாரிக்கின்றது. இதனால் வாத்தி திரைப்படத்தின் இடைவேளையின்போது லியோ திரைப்படத்தின் டைட்டில் டீசரை தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இதனால் லியோ பட டைட்டில் டீசரை சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக படக்குழு அனுப்பி வைத்துள்ளது.