தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படம் உருவாகி வருகிறது. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகிறது. முன்பே இந்த படத்திலிருந்து வெளிவந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் இந்த படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு சில வாரங்களாக சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் தங்கலான் சூட்டிங் துவங்கியது. இதில் பார்வதி சம்மந்தப்பட்ட சூட்டிங் காட்சிகளானது நிறைவடைந்துள்ளது.