வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாரிசு”. இப்படத்தின் புரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு கொச்சியில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட படங்களில் சுனில் பாபு புரொடக்ஷன் டிசைனராக பணிபுரிந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.