பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில், கடந்த வருடம் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய்முறையில் மல்டி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் தன்னுடைய குழந்தையின் முகத்தை வெளி உலகத்திற்கு காட்டாமல் இருந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன்னுடைய மகள் மல்டி மேரியை காண்பித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் மல்டி மேரி பார்ப்பதற்கு அவளுடைய தந்தை நிக் ஜோன்ஸ் போன்று இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். மேலும் பிரியங்கா சோப்ராவின் மகளின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.