சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை என்றும் அது தொடர்பான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும் விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில் சென்னையில் மிக கனமழை கன எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தற்போது கனமழை படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்மேம்பாலத்தில் நிறுத்தியுள்ள கார்களை வாகன ஓட்டிகள் தங்களுடைய வீடுகளுக்கு எடுத்து செல்லலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடக்க இருப்பதால் இன்று சென்னையில் அதிக கன மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழையே பெய்யக்கூடும் என்பதாலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம் என்று பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.