வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்த கணவருடைய குற்றத்தை திருப்பி கேட்ட மனைவியை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் அமரம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். 32 வயதான இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனை தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்பாக லோக பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய வாழ்க்கையில் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் லோகபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று கணவனும், மாமியாரும் அக்கம் பக்கத்திடம் கூறிய போது அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனால் இருவரையும் கைது செய்த நிலையில் லோகபிறியா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனையில் மனைவியை கொலை செய்து விட்டு அதை மறைப்பதற்காக தற்கொலை நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. மேலும் கணவனுக்கு மண்டையில் முடி இல்லாத காரணத்தினால் தொடர்ந்து முடி சண்டை வீட்டில் வந்துள்ளது. இதனால் வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை நடந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் முடி இல்லை என்றால் எல்லாமா இப்படி கொலை செய்வது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்