தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவில் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அஞ்சான், தெறி, 24, நான் ஈ, கத்தி, மெர்சல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நிலையில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரித்துள்ளனர்.
இதையடுத்து திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் எப்படி சினிமாவை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை சமந்தா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் தனக்கு மேல் படிப்பிற்காக பணம் இல்லாத காரணத்தினால் வேறு வழி இன்றி சினிமாவை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்பு சினிமா என்னுடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.