மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் சிக்கியிருப்பதை தெரிந்து இருந்தது. அந்த பெண் குவாலியரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அப்போது மருத்துவர்கள் தவறாக கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள கத்திரிக்கோலை அகற்றுவது குறித்து மருத்துவ ஆலோசனை நடைபெற்று வருகிறது.