வயநாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு காலநிலை மாற்றம் காரணம் என அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை 30-ம் தேதி நாட்டையே உலுக்கிய இந்த வயநாட்டு நிலச்சரிவில் 231- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான காயமடைந்துள்ளனர்.
இந்த பேரிடர்கான காரணங்களை இந்தியா, ஸ்வீடன்,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 24 விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆய்வில், உலக வெப்பமயமாதலே மிக முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வயநாட்டின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பு, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவிகிதம் அதிக மழைப்பொழிவு, ஆகியவையே பேரிடருக்கு மிக முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணமாக நிலப்பரப்பு மாற்றம், குவாரி செயல்பாடு,
காடுகள் அழிப்பு போன்றவற்றையும் சில முக்கிய காரணங்களாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.