வயதான காலத்தில் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது மிக அவசியம். வயது முதிர்ந்தோருக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் உள்ளன. குறிப்பாக வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டம் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வருடாந்திர வட்டியை பெறுகின்றது. 30 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதந்தோறும் 20500 பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் ஒருவர் தனியாக அல்லது மனைவியுடன் சேர்ந்து இணையலாம்.