உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் பகுதியில் ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி மனசாட்சியை உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது ராணுவ வீரர் ஒருவர் தன் வயதான தந்தையை மிகவும் அடித்து கொடூரமாக தாக்குகிறார். அந்த தந்தை தன்னை அடிக்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார். இருப்பினும் ஈவு இரக்கமே இல்லாமல் அந்த மகன் அடித்து துன்புறுத்துகிறார்.
அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். இவர் தன் வயதான தந்தையிடம் பணம் கேட்ட நிலையில் அவர் கொடுக்க மறுத்ததால் கொடூரமாக அடித்த துன்புறுத்தியுள்ளார். அந்த மகனின் பெயர் ஆனந்த் பல்லப் பாண்டே (46). அவரின் தந்தையின் பெயர் நந்தபல்லப் பாண்டே. மேலும் இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த முன்னாள் ராணுவ வீரர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.