
ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற லீக ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா கேப்டன் கே.எல் ராகுலிடம் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல் ராகுல் விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா கேப்டன் கே.எல் ராகுலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.