வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3D, 7D தியேட்டர் அமைக்கப்படும் என தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், புதிய மிருகக்காட்சி சாலை, அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்கப்படும் இதற்காக ரூ.4.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்லது.

3 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.