அமெரிக்க நாட்டில் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான செய்திகள் பலமுறை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சம்பவ நாளில் நியூயார்க்கில் இரவு 11:30 மணி அளவில் ஊபர் டாக்சியை இளம் பெண்கள் புக் செய்தனர். அந்த பெண்ணின் பெயர் கில்பேட். இவர் தன் தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் ஓட்டுநர் மீது பெப்பர் ஸ்ப்ரேவை அடித்தார்.

இதனால் நிலை தடுமாறிய அந்த ஓட்டுனர் என்ன என்னவென்று கேட்டுக்கொண்டே காரை நிறுத்தினார். அவரின் தோழியும் என்னாச்சு என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் அதற்கு அந்த பெண் பதிலளிக்கவில்லை. அந்தப் பெண் காரணம் இல்லாமல் டிரைவர் மீது அப்படி ஒரு தாக்குதல் நடத்திய நிலையில் அவருக்கு இனி ஊபர் டாக்சியில் பயணம் செய்ய அனுமதி கிடையாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அந்த பெண் கருப்பினத்தவர் என்பதால் தான் அவரின் மீது ஸ்பிரே அடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.