தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்தத் திரைப்படத்தை பிரமோஷன் செய்யும் வகையில் மினிக்கி மினிக்கி பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிடுபவர்களுக்கு தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் சிறந்த ரீல்ஸ் 20 தேர்வு செய்யப்பட்டு 20 தங்க நாணயங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது வெற்றி பெறுபவர்களுக்கு பட குழுவினருடன் இணைந்து உணவு அருந்தும் வாய்ப்பையும் படக்குழு ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.