கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலர் மற்றும் அவருடைய குடும்பத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக மீது பாஜகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ராணுவ வீரர் உயிரிழந்தது தொடர்பாக ஆங்கில பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் டென்ஷனோடு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டது குறித்து நிருபர் கேள்வி எழுப்ப கொலை செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதன் பிறகு அவர் உங்களுடைய கட்சி நிர்வாகி தானே அதற்கு முதல்வரோ அல்லது உங்கள் கட்சியை சேர்ந்தவர்களோ எதுவும் பேசாமல் மௌனம் காப்பது எதற்காக என்ற நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் உதயநிதி குடும்ப பிரச்சனையால் கொலை நடந்துள்ளது என்று கூறினார். மேலும் நிருபர் கேட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் ஒரே பதிலை கூறிவிட்டு டென்ஷனோடு அங்கிருந்து கிளம்பி சென்ற வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.