தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் ‘ரத்தக் கலை’க்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தால் பெயின்ட் அடிக்கும் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில், “ரத்தம் புனிதமான ஒன்று. ரத்த தானம் மூலம் எத்தனையோ உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. ரத்தத்தில் படம் வரைந்து காதல் மற்றும் நட்பை வெளிப்படுத்துவது அவசியமற்றது என்று கூறினார்.