பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியன் 2 வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்த அவருடைய இயக்கத்தில் நேற்று கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். அதன்பிறகு சமுத்திரக்கனி, க்யாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒரு மாவட்ட ஆட்சியரின் உண்மை கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் நேற்று வெளியான நிலையில் உலகம் முழுவதும் 186 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் சாதனை புரிந்துள்ளதாக வடக்குழு போஸ்டர் வெளியிட்ட அறிவித்துள்ளது. மேலும் இனி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்தடுத்து விடுமுறை வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.