கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய காதலிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காரணத்திற்காக தன்னுடைய தீவிர ரசிகரான ரேணுகா சாமி என்பவரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இவருடன் அவருடைய காதலி பவித்ரா கவுடா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.