தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் சரூர் நகரில் இருந்து சையத் நகரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம்  நோயாளியை அழைத்துக் கொண்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸ் ‌ மருத்துவமனைக்கு சென்ற நிலையில் வெளியே நிறுத்தப்பட்டு உள்ளது. அப்போது ஒருவர் ஆம்புலன்சை  திருடிவிட்டு சென்றுவிட்டார். அதாவது நரசிம்மபுரம் பகுதியில் கால பைரவா என்ற வெங்கடேஸ்வரலு (55) வசித்து வருகிறார்.

இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் ஆளில்லாத நேரம் பார்த்து ஆம்புலன்ஸ்சை திருடி சென்ற நிலையில் வெளிய வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பின்னர் ஆம்புலன்ஸில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் காவல்துறை உதவியோடு தேடினர். அப்போது ஆம்புலன்ஸ் இருக்கும் இடம் தெரிந்த நிலையில் காவல்துறையினர் ஒரு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தும்படி கூறிய நிலையில் அவரோ காவல்துறையினர் வாகனத்தின் மீதே ஆம்புலன்ஸை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்று விட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் பின்னர் ஆம்புலன்சை விடாமல் அவர்கள் துரத்தி சென்றனர். ஆனால் அவரும் ஆம்புலன்சை  நிறுத்தாமல் வெவ்வேறு வழிகளில் சென்றார்.

பின்னர் அவர் செல்லும் வழியில் வரிசையாக லாரிகளை நிறுத்தினர். ஆனாலும் அவர் வேறு திசையில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி ஒரு சாலையோர பள்ளத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் ஆம்புலன்சை  பறிமுதல் செய்தனர். திருடி செல்லப்பட்ட அந்த ஆம்புலன்ஸை காவல்துறையினர் கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தி சென்று பிடித்துள்ளனர். மேலும் திருடியவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.