வித்தியாசமான புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகும். அந்த வகையில் வேலைக்கு ஆள் தேடும் ஒரு விளம்பரம் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக வேலைக்கு ஆள் தேவை என்றால் கல்வித் தகுதி, சம்பளம், வயதுவரம்பு உள்ளிட்ட விவரங்களை கொடுத்து வேலைக்கு ஆள் எடுப்பார்கள். ஆனால் ஒரு நிறுவனம் ராசி பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கிறது.

மதுரையில் இருக்கும் கிளை அலுவலகத்திற்கு மிதுனம், ரிஷபம், கன்னி, கும்பம், தனுஷ், மகரம், கடகம் ராசிக்காரர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்த பலரும் இப்படி எல்லாம் கூட ஆள் எடுக்குறாங்களா? புதுசு புதுசா யோசிக்கிறாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.