தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்திப் கிஷன் தமிழில் லோகேஷ் இயக்கத்தில் நடித்த மாநகரம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்குப் பிறகு சந்தீப் கிஷன் தற்போது மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள நிலையில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள மைக்கேல் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் மைக்கேல் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நடிகர் சந்தீப் கிஷன் தளபதி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அது தொடர்பான புகைப்படத்தை சந்தீப் கிஷன் தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.