முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதிலும் இவர் முன்னாள் பா.ஜனதா எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயப்பிரதா  கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இருவேறு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஜெயப்பிரதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3½ வருடமாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பின் ஒவ்வொரு முறை சம்மன் அனுப்பியும் ஜெயப்பிரதா கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிபதி பிறப்பித்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராம்பூர் நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா நேரில் சரண் அடைந்தார். இதன் பின் ஜெயப்பிரதாவின் கைது வாரண்டை, நீதிபதி ரத்து செய்து  ஜாமீன் வழங்கி உத்தரவுத்தார்.