கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட திருமணமாகாத இளம்பெண் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேப்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து(65) என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாடு மேய்க்கும் போது அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் போலீசார் மாரிமுத்துவை அதிரடியாக கைது செய்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது